திருப்புவனம், ஜூலை 12: திருப்புவனம் அருகே ஆலங்குளம் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது இரண்டரை வயது குழந்தை தயானந்த். இவர்கள், வீட்டருகே வீடு கட்டுவதற்காக மணல் ஏற்றி வந்த சரக்கு வேன் வந்தது. மணலை கொட்டி விட்டு திரும்ப வரும்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தயானந்த் மீது மோதியது. இதில் வேனின் முன்பக்க டயரில் குழந்தை விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுபற்றி திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிந்து, வேன் டிரைவர் மணலூரை சேர்ந்த ஜெயக்குமார்(32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.