கோவில்பட்டி, மே 28: கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த அருண் மற்றும் 3 குடும்பத்தினர், கடந்த 17ம் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கரூரில் எதிரே வந்த ஆம்னி பேருந்து, வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அருண் மற்றும் ஓட்டுநர் சசிகுமார் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அனைத்து மேக்சி கேப் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், ஒருங்கிணைப்பாளர் அமலிபிரகாஷ் தலைமையில் சசிகுமார் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரூ.1.80 லட்சத்தை ஓட்டுநர் சசிகுமார் குடும்பத்திற்கு வழங்கினர்.
மேலும் குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக தேவை இருப்பின் அவற்றை கோவில்பட்டி அனைத்து மேக்சி கேப் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்து தரப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உள்பட பலர் உடனிருந்தனர்.