திருவண்ணாமலை, ஜூன் 19: திருவண்ணாமலை அருகே மாப்பிள்ளை வீடு பார்க்க சென்றபோது வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் விருப்பாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(50). இவரது மகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. அதையொட்டி, செல்வம் தனது உறவினர்களுடன் நேற்று மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்காக வேலூரில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேனில் மூங்கில்துறைப்பட்டுநோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலை – வேலூர் சாலையில் மல்லவாடி அருகே கருந்துவம்பாடி கூட்ரோடு சாலையை சைக்கிளில் முதியவர் ஒருவர் திடீரென கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க சாலையோரமாக வேனை முயற்சித்த போது, நிலைத்திடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த செல்வம், அவரது மனைவி தீபா, வேன் டிரைவர் சரவணன் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, அங்கிருந்த வர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயம் மாப்பிள்ளை வீடு பார்க்க சென்றபோது விபத்து
0
previous post