வேதாரண்யம், மே 27: வேதாரண்யம் மேற்கு ஒன்றியத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக பொறியாளர் அணியினர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.வேதாரண்யம் மேற்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளராக கலைச்செல்வன் துணை அமைப்பாளர்களாக அரசு, சரவணன், வினோத், ராஜேந்திரன், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.அவர்களுக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் புத்தகங்களை நினைவு பரிசாக வழங்கினார்.