வேதாரண்யம், ஆக.12: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இங்குள்ள துர்க்கையம்மன் திரிபங்கி வடிவில் தெற்கு நோக்கி அருள்பாலித்து வருகிறது. இங்குள்ள துர்க்கையம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு எலுமிச்சை பழ விளக்கேற்றி வழிபட்டனர்.
இதே போல் வேதாரண்யம் நகரம் நாட்டுமடம் மாரியம்மன், கள்ளிமேடு காளியம்மன் கோயில், தோப்புத்துறை வனதுர்க்கையம்மன் கோயில், தேரடி காளியம்மன் கோயில், அகஸ்தியன்பள்ளி, பக்தர்குளம் மாரியம்மன்கோயில், கோடியக்கரை கோடிமுத்துமாரியம்மன் கோயில், போன்றவற்றில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.