வேதாரண்யம், மே 29: நகராட்சி பகுதியில் 8 குளங்கள் நாலு கோடியே 79 லட்சத்தி 80 ஆயிரம் செலவில் புனரமைப்பு செய்யப்படுகிறது என நகர்மன்ற தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார். வேதாரண்யம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளம், அகஸ்தியர் குளம் மற்றும் வனதுர்கை அம்மன் கோவில் குளம் ஆகிய மூன்று குளங்களும் தூர்வாரப்பட்டு படித்துறை அமைக்கப்பட்டு நடை பயிற்சிக்கு நடைபாதை அமைக்கப்பட்டு பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்குளம், மாரியம்மன் கோவில் குளம், புஷ்கரணி சிவன் கோவில்குளம், மண்டப குளம், திருவாசல் குளம், தோப்புத்துறை மாரியம்மன் கோவில் குளம் ஆகிய குளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆறு மாதத்தில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என விடப்படும் என நகர்மன்ற தலைவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் நகராட்சியில் ரூ.4.80 கோடியில் குளங்கள் சீரமைக்கும் பணி
0