வேதாரண்யம், ஜூலை 2: வேதாரண்யம் அருகே 350 கிலோ குட்கா சிக்கியது. இதில் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை ஆறுமுச்சந்தி பகுதியில் போலீசார் தனிப்படையுடன் இணைந்து வேதாரண்யம் காவல் ஆய்வாளர் தர் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் கீழ வீதி பகுதியை சேர்ந்த பஷீர் அகமது (47) என்பவரின் இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில் கூலிப், கான்சு, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது .உடனடியாக இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, பஷீர் அகமதுவை கைது வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் இருந்த 350 கிலோ கான்ஸ் மற்றும் கூலிப்பை பறிமுதல் செய்தனர். பின்னர் நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.