வேதாரண்யம், மார்ச் 5: வேதாரண்யம் அடுத்த மறைஞாய நல்லூரில் மேல மறைக்காடர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் வாராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. பஞ்சமி தினத்தில் வாராஹி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வடை மாலை, மஞ்சள் மாலை என சாத்தப்பட்டு மகா தீபாராதனையும் சிறப்பு ஆராதனைகளும் கூட்டு வழிபாடும் நடைபெற்றது. பெண்கள் வாழை இலையில் பச்சரிசி, வெல்லம், பழங்கள், தேங்காய் வைத்து நெய் தீபம் ஏற்றி வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.