வேதாரண்யம், ஜூலை 22: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை வில்லவன் கோதை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வேம்பையன் வரவேற்றார். கலை இலக்கிய, பண்பாட்டு பயிற்றுநர் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார். விழாவில், ஆசிரியர் ரமேஷ்குமார், தர்மதுரை, யூடஸ் சுகிலா, வீரமணி, சித்ரா, பிரதீபா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.