வேதாரண்யம், ஜூன் 8: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி பகுதியில் அமைந்துள்ள அகத்தியர் கோயில் என்று அழைக்கப்படும், பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை அக்னிபுரீஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.நேற்று காலை 6ம்கால யாகசாலை பூஜைகள் முடித்து கோவிலை சுற்றி சிவாச்சாரியார்கள் கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னாள் எம்எல்ஏ காமராஜ், விழா குழுவினர், அறநிலைதுறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.