வேதாரண்யம்,ஆக.18: வேதாரண்யத்தில் புத்தக திருவிழா வேதாரண்யம் பல்நோக்கு பேரிடர் மைய கட்டிடத்தில் நடைபெற்றது.விழாவிற்கு கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன், மற்றும் ராஜகுமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் புகழேந்தி வாழ்த்துரை வழங்கி புத்தகத் திருவிழாவை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கேடிலியப்பன், செந்தில், ரகுநாதன், சந்திரகாந்தன், சிவகுமார், ரமேஷ்குமார், கருணாநிதி, உமாமகேஸ்வரன், குணசேகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.