வேதாரண்யம், ஆக.22: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா அண்டர்காடு திரவுபதை அம்மன் ஆலய வளாகத்தில் வேதாரண்யம் கிழக்கு ஒன்றியதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்குஒன்றிய திமுக அவைத் தலைவர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு கிழக்குஒன்றிய கழகச் செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சோழன் , மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவிந்தராசு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜகோபாலன் , முத்துலெட்சுமி தென்னரசு, மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் தாமோதரன், செந்தாமரைச்செல்வன், மோகன், செந்தில், சம்பத், பழனியப்பன், உஷாராணி தர்மலிங்கம், சதீஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூறு ரூபாய் நாணயம் வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்து கொள்வது. நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலில் முழுமூச்சுடன் கழகப் பணியாற்றி மீண்டும் திமுக ஆட்சியில் அமர பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.