குஜிலியம்பாறை, ஜூலை 25: தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி நடைபெறுகிறது. அதன்படி, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை டி.கூடலூர் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி, வேடசந்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, ஆர்விஎஸ் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, அய்யலூர் ஆர்விஎஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் கல்லூரி நிர்வாகத்திடம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரவிசங்கர், ராஜ்குமார் உள்ளிட்டோர் பேச்சு போட்டிக்கான விண்ணப்பங்களை வழங்கினர். இதேபோல் தொடர்ந்து மற்ற கல்லூரிகளிலும் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என கட்சியினர் தெரிவித்தனர்.
வேடசந்தூர் பகுதி கல்லூரிகளில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி விண்ணப்பங்கள் விநியோகம்
81
previous post