வேடசந்தூர், ஆக.5: வேடசந்தூர் அருகே வீடு புகுந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேடசந்தூர் அருகே உள்ள சுள்ளெறும்பு நால்ரோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (50). இவரது மனைவி செல்வராணி (46). இவர்கள் இருவரும் நவமரத்துபட்டி அருகே உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்திற்கு நேற்று காலை 10 மணி அளவில் சென்றனர்.
தோட்டத்து வேலைகளை முடித்துவிட்டு மாலை வீடு வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் உள்ளே சென்று பார்த்த பொழுது 4 பவுன் நகை ரூ.2.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கந்தசாமி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்ஐ வேல்மணி கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். பட்ட பகலில் வீட்டின் பூட்டு பீரோவை உடைத்து கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.