வேடசந்தூர், ஆக. 14: வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவிக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் நாகராஜ், பாசித் ரகுமான், பாலாஜி, பாஸ்கரன் ஆகியோர் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் 3 மூட்டைகளுடன் வந்த வேடசந்தூர் உசேன் ராவுத்தர் தெருவை சேர்ந்த முகமது ரபீக் (30) என்பவர் நிறுத்தாமல் சென்றுள்ளார். உடனே தனிப்படை போலீசார் அவரை விரட்டி பிடித்து மூட்டைகளை திறந்து சோதனையிட்டனர். அதில் 50 கிலோ புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படை போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, அவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிந்து முகமது ரபீக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.2 1/2 லட்சம் ஆகும்.