வேடசந்தூர், மார்ச் 11: வேடசந்தூர் அருகே ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ஆலோசனையின் பேரில் அய்யலூர் வனச்சரகம் சார்பாக அய்யலூர் வனப்பணியாளர்கள், திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஐந்து குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபட்டனர்.
இதில் அழகாபுரி அணை மற்றும் வேடசந்தூர், வடமதுரை, செங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளங்களில் மீன் கொத்தி, சாம்பல் நாரை, செந்நாரை, நீர் காகம், கூகை, முக்குளிப்பான், நாமகோழி, சின்ன கொக்கு போன்ற ஈரநிலபறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.