கூடலூர், மே 19: கூடலூரை அடுத்துள்ள மேல் கூடலூர் பகுதியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு தினசரி ஏராளமான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். சற்று வளைவான சாலை பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் கிளைச்சாலை பிரிந்து செல்கிறது. மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான தனியார் வாகனங்கள், மற்றும் இருசக்கர வாகனங்கள் மருத்துவமனை பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லாததால் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கி சாலையைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலை பகுதியில் இருபுறமும் இருந்து வரும் வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் சாலையை கடந்து செல்லும் நோயாளிகள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, மருத்துவமனைக்கு செல்லும் சாலையை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
0