அரூர், ஆக. 23: மொரப்பூர் – கம்பைநல்லூர் சாலையில் சந்தைமேடு, கல்லாவி சாலை, நவலை, ஒடசல்பட்டி சாலை, காவல்நிலையம் முன்புறம், கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துக்களை தடுக்கும் வகையில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதால் நாளடைவில் வெள்ளை வர்ணம் பூச்சு மறைந்து போனது. இதனால், இரவு நேரத்தில் வாகனங்களில் வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல், விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டனர்.
வேகத்தடைகளில் வர்ணம் பூசும் பணி
previous post