ஒரத்தநாடு, செப். 5: ஒரத்தநாடு அருகே உள்ள தாந்தோணி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (55) இவர் சொந்தமாக லாரி ஒன்று வைத்து லோடு ஏற்றும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஒரத்தநாட்டில் இருந்து பைக்கில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரத்தநாடு தனியார் பள்ளி வேன் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல திருவோணம் இலுப்பை விடுதி கிராமத்தில் ஒரத்தநாடு கந்தர்வக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வெட்டிக்காட்டில் இருந்து சென்ற லோடு ஆட்டோவும், திருவோணத்தில் இருந்து வெட்டிக்காட்டை நோக்கி வந்த மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் அருள் அமரன்(30) மற்றும் அவரது நண்பர் பட்டுக்கோட்டை முதல் சேரியைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் வந்த பைக்கை லோடு ஆட்டோ மோதியதில் அருள்அமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.