திருச்சி, செப்.4: திருச்சியில் இருவேறு பகுதிகளில் மூதாட்டி, சிறுமி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர் திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை மல்லிகை புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி தமிழரசி (65.) சம்பவத்தன்று வீட்டில் இருந்த தமிழரசி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது மகன் தினேஷ் ரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதேபோன்று திருச்சி பாலக்கரை அமர் ஷா மசூதி தெருவை சேர்ந்தவர் முகமது தவ்ஹீத். இவரது 16 வயது மகள் சம்பவத்தன்று உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தவ்ஹீத் அளித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.