சேலம், ஜூன் 19: சேலம் அம்மாபேட்டை காவல்நிலைய எஸ்ஐ புவனேஸ்வரி, பச்சப்பட்டி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அதில் அவர் தாதகாப்பட்டியை சேர்ந்த கிருபாகரன்(29) என்பதும், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அம்மாபேட்டை எஸ்ஐ ராமமூர்த்தி, குஞ்சன்காடு பகுதியில் ரோந்து சென்ற போது, அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அமீர் (19) என்பவரை கைது செய்தார். சூரமங்கலம் எஸ்ஐ சூர்யா பழையூர் பகுதியில் ரோந்து சென்றபோது, பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பூரை சேர்ந்த ராகுல் (25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
0