சேலம், ஆக.21: சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் பழனிசாமி (30), வெள்ளி வியாபாரி. இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் இடையே வெள்ளி பொருட்கள் விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி இரவு 8 மணியளவில் பழனிசாமி, பெரிபுதூரில் உள்ள சூப்பர்மார்க்கெட் பகுதியில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது, மூர்த்தி உள்ளிட்ட 4 பேர் கும்பலாக வந்து, பழனிசாமியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கினர். அவர், படுகாயமடைந்து கீழே சரிந்து விழவும் 4 பேரும் தப்பியோடினர். அவ்வழியே வந்தவர்கள், பழனிசாமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி கொண்டலாம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்ஐ கோவிந்தராஜன் விசாரணை நடத்தி, பழனிசாமியை தாக்கிய மூர்த்தி, விக்கி, தீபக், கில்லி ஆகிய 4 பேர் மீது 4பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
வெள்ளி வியாபாரி மீது தாக்குதல்
previous post