கரூர், பிப். 24: கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.விழாவில் வெள்ளியணை காவல் நிலைய எஸ்ஐ கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பள்ளிக் கொடியை தலைமையாசிரியை அமலிடெய்சி ஏற்றி வைத்தார். பள்ளிக் கட்டிட குழு தலைவர் பாலு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, கலை, இலக்கியம் மற்றும் பல்வேறு விளையாட்டு போ ட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.இந்த நிகழ்வில் அனைத்து மாணவிகளும், பெற்றோர்களும் அதிகளவு கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.