நாகர்கோவில், ஜூன் 10: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அருணாச்சலா நிறுவனத்தின் புதிய படைப்பாகிய அருணாச்சலா வேர்ல்டு ஸ்கூலின் திறப்பு விழாவானது துணை தாளாளர் சுனியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தாளாளர் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநர்கள் தருண் சுரத் மற்றும் மீனா ஜெனித், சிறப்பு விருந்தினராக குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பேபியமா எடியுடெக் பிரைவேட் லிமிடெட் (கோயம்புத்தூர்) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் நிறுவனருமான டாக்டர் அஷ்வின் சங்கமேஷ், கலை கல்லூரி முதல்வர் விஜிமலர் மற்றும் வேர்ல்டு ஸ்கூல் முதல்வர் ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி துவக்க விழாவானது ஆசிரியை பெர்சிலா சத்தியகுமார் வரவேற்புரை மற்றும் குத்துவிளக்கேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமானது. தாளாளர் கிருஷ்ண சுவாமி தலைமை உரை ஆற்றினார். பள்ளியின் நோக்கம், செயல்திட்டம் பற்றி பள்ளி இயக்குநர் தருண் சுரத் பேசினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் அஷ்வின் சங்கமேஷ் சிறு வயது முதல் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகளுக்கு கிடைக்கப்பெற வேண்டிய தொடக்க நிலைக் கல்வியின் அவசியம் மேலும் அவற்றை கற்பிக்கும் முறைகள், குழந்தைகளிடம் பெற்றோருக்கு இருக்க வேண்டிய பங்களிப்புகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேர்ல்டு ஸ்கூல் முதல்வர் ஆர்த்தி வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை ஜியோ ரெமிஷா நன்றி கூறினார்.