ஆர்.கே.பேட்டை, மே 31: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்தூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால், மழை காலங்களில் கட்டிடத்தில் மழைநீர் கசிவதால், கிராம பதிவேடுகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்படும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.