வெள்ளக்கோவில், ஆக. 19: வெள்ளகோவில் மார்க்கெட்டுக்கு முருங்கை 12 டன் வரத்து வந்த நிலையில் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. தமிழகத்தில் கொடி முருங்கை, செடி முருங்கை, மரமுருங்கை, செம்முருங்கை என 4 வகை முருங்கைகள் உள்ளன. இவற்றில், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த முருங்கையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனை வியாபாரிகள் கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். நேற்று 12 டன் வரத்தானது, மரமுருங்கை ரூ.10க்கும், செடி முருங்கை ரூ.11க்கும், கரும்பு முருங்கை ரூ.23க்கும் விற்பனையானது. முருங்கை விலை குறைந்ததால் விவசாயிகள் கவலைடைந்தனர்.