வெள்ளகோவில், ஜூலை 2: வெள்ளகோவில் அருகே உள்ள கரைவலசு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவசாமி (45). இவர் தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 35 ஆடுகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்தி இரவு பட்டியில் அடைத்து சென்றார். நேற்று அதிகாலை பட்டியில் ஆடுகள் அங்குமிங்கும் அலறல் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தன. இதை அறிந்த பக்கத்து தோட்டத்துகாரர் சென்று பார்த்தபோது நாய்கள் உள்ள புகுந்து கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.