ஈரோடு, மே 24: கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வாணிப்புத்தூர் பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோணக் கொடிக்கால் பகுதியில், இளங்கோ வீதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் (52), கர்நாடக மாநில மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கர்நாடக மது பாக்கெட்கள் 20 மற்றும் மதுபாட்டில்கள் 2 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், ஆசனூர் போலீசார் தங்களது சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த நபரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டத்தில் அவர் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரள மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு (30), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.