ஈரோடு, அக்.15: ஈரோடு அருகே உள்ள சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று 30 கிலோ எடை கொண்ட 2,400 மூட்டை நாட்டு சர்க்கரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், ஒரு மூட்டை ரூ. 1,220 முதல் ரூ.1,350 வரை விலை போனது. இதேபோல், உருண்டை வெல்லம் 3,100 மூட்டைகள் விற்பனை கொண்டுவரப்பட்டிருந்தன. இவை, ஒரு மூட்டை ரூ.1,250 முதல் ரூ.1,330 வரை விற்பனையாகின. அச்சு வெல்லம் 250 மூட்டைகள் வந்திருந்தன. இவை ஒரு மூட்டை ரூ.1,310 முதல் ரூ.1,350 வரை விற்பனையானது. கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் அச்சு வெல்லம் வரத்து மிகவும் சரிந்திருந்தது. அதேநேரம், நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் மூட்டைக்கு ரூ.30 விலை உயர்ந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.