மாதவரம், மே 31: மாதவரம் கணபதி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இங்கு பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் (29) என்பவர், நேற்று முன்தினம் இரவு தண்ணீர் டேங்கர் லாரியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வெல்டிங் காஸ் கசிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் வயிறு, முகம், கை ஆகிய பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜ்கிஷோரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.