அறிவியலின்படி சூரியனை பூமி சுற்றி வருவது நாம் அறிந்ததே! அதேபோல சந்திரன் பூமியைச் சுற்றி வருவதையும் நாம் அறிவோம். இந்த பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும், சந்திரனின் சுற்றுவட்டப்பாதையிலும் வெட்டிக்கொள்ளும் இரு புள்ளிகளையே ராகு கேது என அழைக்கிறோம். தேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால்பாகத்தை தேவர்களும் பற்றி இருந்தனர்.அப்போது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். விஷம் அவரது கழுத்துக்கு கீழே போகவிடாமல் பார்வதி தேவி தடுத்தாள். பின்னர் அமுதத்தை வழங்க விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து ,தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியாக உட்காரும் படி மோகினி கூறினாள்.அந்த தருணத்தில் ஸ்வர்பானு என்ற அரக்கன், தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை உண்டான். அவனது சூழ்ச்சி பின்னர் தெரிய வந்தது. கடும் கோபம் கொண்ட மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, ஸ்வர்பானுவை கட்டுவத்தால் அடித்தார். அப்போது அவன் உடல், தலை என தனித் தனியாகச் சிதறியது.உடல் துண்டிக்கப்பட்ட ஸ்வர்பானு திருமாலை நோக்கி கடும்தவம் புரிந்தான். அவன் தவத்தை விஷ்ணு பகவான் ஏற்று, பாம்பின் உடல், பாம்பின் தலைகொண்ட இரண்டு உருவங்களாக ஸ்வர்பானுவை சிருஷ்டித்தார்.பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகுவானது. பாம்பின் தலையும் மனித உடலும் கேதுவானது.இப்படிப்பட்ட ராகுவும், கேதுவும் ‘சாயா கிரகங்கள்’ என்றும், ‘நிழற்கிரகங்கள்’ என்றும் கூறுவர். நம்மை நிழல்போல் தொடரும் துன்பங்கள் விலகிச்செல்ல சர்ப்ப ப்ரீதிகள் செய்வது நல்லது.ராகு சர்பசஸ்வரூபி. ஒவ்வொரு நாளிலும் இவர் வலிமை பெற்ற காலத்தை ராகு காலம் என்று கணக்கிட்டு உள்ளனர். ராகுகாலத்தில் துர்கா பூஜை செய்வதும் எலுமிச்சம் பழத் தொன்னையில் தீபம் ஏற்றி வைப்பதும் ராகு ப்ரீதியாகும்.ராகுக்கு போல் கேதுவுக்கும் சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். ராகுவுக்கு உள்ள பண்புகள் அனைத்தும் கேதுவுக்கும் பொருந்தும். மாந்தரீகம்,ஞானம்,மோட்சம்.,விநாயகர் வழிபாடு,விரக்தியடைதல்,புண்ணிய ஸ்தல யாத்திரை.சிறைப்படல்,ஞானிகள் தரிசனம் ஆகியவற்றிக்கு கேது காரணம் ஆகிறார். இவருக்கு ஞானகாரகன் என்று பெயர். வேதாந்த அறிவு நுட்பங்களுக்கும், மோட்சத்திற்க்கும், எந்த ஓரு பிரச்னையிலிருந்து விமோச்சனம் பெறுவதற்க்கும் காரகத்துவம் உள்ளது கேது. எளிமை, கடுமை இரண்டுக்கும் உடையதும், உலக பந்தங்களில் இருந்து விடுபட வைப்பதும் கேதுவே. வியாதியில் இருந்து நிவாரணம் தந்து, பகைவரை முறியடிக்கச் செய்வதும் கேது. கோபத்தில் நடைபெறும் தவறுகளுக்கும் கேதுவே காரணம்.கேதுவைப்போல கெடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பழமொழி. விபத்துகளையும். தீய சகவாசத்தையும் வழங்குவதும் கேதுவே.ரிஷபத்தில் நீசம், விருச்சிகத்தில் உச்சம். பஞ்ச பூதங்களில் ஜலம். கேது ஞானமார்க்கத்தில் ஆன்மீகத்தை வழங்குபவர். ஞானகாரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய்வழிப் பாட்டனுக்குக் காரகன். கேது ஜைமினி கோத்திரத்தில் பிறந்தவர். பிரம்மா தேவதை .சித்திரகுப்தன் அதி தேவதை கேது பகவான் மனிதர்களுக்கு ஞானத்தை கொடுப்பவர் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராகு கேது க்ஷேத்ரம் காளஹஸ்தி. மூர்த்தியின் பெயர் ஸ்ரீகாளஹஸ்தியீஸ்வரர்.இந்த இதழில் ஆன்மிக பலன் வாசகர்களுக்காக ராகு கேது கவசத்தை வெளியிட்டுயிருக்கிறோம். இந்த ராகு கேது கவசத்தை நாம் நாள்தோறும் படித்து வந்தால் ராகு கேது தோஷம் நிவர்த்தியாகிறது என்று நம்பப்படுகிறது.ராஹு கவச மந்திரம் ஸிர: பாது-லலாடம் ேலாக வந்தித: பாது மேராஹு: – ஸ்ரோத்ரம் அர்த்தஸரீரவான் ||கராளாஸ்ய: ஸூல பாணிர்முகம் மமஸிம்ஹிகா ஸூநு:-கண்டம்மே கஷ்டநாஸக:புஜௌ பாது – நீல மால்ய: கரௌ மமதபோமூர்த்தி: – பாது நாபிம் விதுந்துத: ||விகட: பாது – ஊரூமே அஸுர பூஜித:ஜாநுநீ பாது – ஸர்வாங்கம் ஸிம்ஹிகாஸுத:கவசம் – ஈப்தஸித வஸ்துதம் யோபடேதுநுதிநம் – நியத: ஸுசிஸ்ஸன்கீர்த்திம் – அதுலாஞ்ச ஸியஸ் ஸம்ருத்திம்மாஸு விஜயாதி அஸுர ப்ரபாவாத் ||கவச மந்திரம்வர்ண: ஸிர: பாதுபாலம் மே தூம்ர வர்ணக:நேத்ரே பிங்களாக்ஷ: – ஸ்ருதீ மே ரத்த லோசந:பாது ஸுவர்ணாப: – த்விபுஜம் ஸிம்ஹிகா ஸுத:கண்டஞ்ச மே கேது: – ஸ்கந்தௌ பாதுக்ருஹாதிப:பாது அஸுர ஸ்ரேஷ்ட: – குக்ஷிம்பாது மஹோரக:கடிம்பாது – மத்யம் பாது மஹாஸுர:மஹாஸீர்ஷ: – ஜாநுநீச ப்ரகோபந: -பாதௌசமே ரௌத்ர: – ஸர்வாங்கம் ரவி மர்தக: |இதன் பொருள்:- ஸ்பஷ்டமானது. பிறகு கரன் யாஸம்செய்து “திக்விமோக.” வரை கூறவேண்டும்.ய இதம் கவசம் கேதோ:- ஸர்வரோக நிவாரணம் பக்தியுக்த:நித்யம் – ஸர்வதுக்கை: ஸ முச்யதே||ஸர்வ ரோகங்களையும் போக்குகின்ற கேது கவசத்தை நாமும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ஸர்வ துக்கங்களும் அகலும்.ஸ்ரீ கேது கவச ஸ்தோத்ரம் தூம்ர வர்ணம் த்வஜாகாரம் கதாவர கரத்வயம் |சித்ராம்பர தரம் சித்ர கந்தானலேபனம் ||வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய மகுடோஜ்வலம் |சித்ரம் கபோதமாருஹ்ய மேரும் யாந்தமதக்ஷணம் ||கேதும் கராலவதனம் சித்ரவர்ணம் கிரீடினம் |ப்ரணமாமி ஸதாதேவம் த்வஜாகாரம் க்ரஹேஸ்வரம் ||(இங்கு லமித்யாதி மானஸ பூைஜ செய்யவும்)சித்ர வர்ணஸ்ஸிர: பாது பாலம் மே தூம்ரவர்ணக: |பாதுநேத்ரே பிங்கலாக்ஷ: ஸ்ருதீ மே ரக்தலோசன: ||க்ராணம் பாது ஸுவர்ணாப: வதனம் ஸிம்ஹிகா ஸுத: |பாது கண்டம் ச மே கேது: ஸ்கந்தௌ பாதுக்ரஹாதிப: ||பாஹூ பாத்வஸுர ஸ்ரேஷ்ட: குக்ஷிம்பாது மஹோதர: |ஸிம்ஹாஸன: கடிம் பாது மத்யம் பாது மஹாஸுர: ||ஊரூ பாது மஹாஸீர்ஷோ ஜாநுநீ ச ப்ரகோபன: |பாது பாதௌ ச மே ரௌத்ர: ஸர்வாங்கம் ரவிமர்தக: || (இங்கு அங்கன்யாஸம் செய்ய வேண்டும்)ய இதம் கவசம் கேதோ: ஸர்வ ரோக நிவாரணம் |பக்தியுக்த: படேன் நித்யம் ஸர்வது:கை: ஸமுச்யதே ||அனுஷா…