சூளகிரி, செப்.5: சூளகிரி ஊராட்சி கோட்டை தெரு, வாணியர்தெரு, கீழ் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று சூளகிரி வாணியர் தெருவில் சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று, அப்பகுதியை சேர்ந்த 2வயது முதல் 10வயது வரையிலான சிறுவர்கள் 4பேரை கடித்தது. அதேபோல் 2பெண்கள், ஒரு ஆண் உள்பட 3பேரையும் வெறிநாய் கடித்தது. நாய் கடித்து காயமடைந்தவர்கள், சூளகிரி வட்டார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெறிநாய் கடித்து 7 பேர் படுகாயம்
previous post