அரூர்: புரட்டாசி மாதம் முழுவதும், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வருகின்றனர். எனவே, பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவை தவிர்த்து விடுவார்கள். புரட்டாசி மாதம் துவங்கி நேற்று 2வது ஞாயிற்றுக்கிழமையில் அரூரில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கோழி, ஆடு, மீன் கடை என அனைத்து விதமான இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.