வேப்பனஹள்ளி, ஜூன் 5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த வாரத்திற்கு முன்பாக, தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் இதமான சூழல் காணப்பட்டது. தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து வெயில் அதிகரித்தால் மாங்காய்கள் உதிரும் நிலை ஏற்படும் என மா வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வேப்பனஹள்ளியில் கடும் வெயில் வாட்டி வதைப்பதால், மாமரங்களில் மாங்காய்கள் உதிர்ந்து, எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது,’ என்றனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
0