திருப்பூர், பிப்.18: கோடை வெயில் இந்தாண்டு பிப்ரவரி மாதமே தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தை தணித்துக் கொள்ள பொதுமக்கள் பழ வகைகள் மற்றும் குளிர்பானங்களை அருந்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக திண்டுக்கல் பகுதியில் இருந்து திருப்பூருக்கு முலாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூர் பல்லடம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முலாம்பழம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் வரும் நாட்களில் இன்னும் வரத்து அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதால் விலை குறையும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.