ஏழாயிரம்பண்ணை, ஆக.12: வெம்பக்கோட்டை அருகே கங்கரக்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் 2016-17 முதல் 2021-22 வரை நிதியாண்டில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமுருகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும், சமூக தணிக்கையின் நோக்கம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொண்டனர். பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டார். ஊராட்சி கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.