Saturday, June 14, 2025
Home மருத்துவம்இயற்கை மருத்துவம் வெந்நீர் எப்போது…எப்படி…எவ்வளவு?

வெந்நீர் எப்போது…எப்படி…எவ்வளவு?

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்அறிந்துகொள்வோம்பொதுவாகவே தண்ணீர் நம் வாழ்வின் இன்றியமையாத தேவை. மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவையான அடிப்படை கூறுகளில் முதன்மையானதும் கூட. உடலில்; உள்ள எல்லா நச்சுக்களையும் வெளியேற்றவும், சரியாக செயல்படவும் ஒருவர் தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று; அடிக்கடி எல்லா மருத்துவ முறைகளிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதுவும், மழைக்காலத்தில் வெதுவெதுப்பான நீரைப் பருகுவது தொண்டைக்கு இதமாக; இருப்பதை உணர முடியும். இந்த வெந்நீரை அருந்தும் முறை பற்றி நிபுணர்களும், ஆராய்ச்சிகளும் கூறியிருப்பதென்ன?வெந்நீர் அல்லது சுடுநீரின் அருமையை உணர்ந்த பண்டைய சீன மருத்துவம் மற்றும் இந்திய கலாச்சாரம், ஒரு கிளாஸ் சூடான நீருடன் நாளைத் தொடங்குவது; அந்த நாளின் செரிமான அமைப்பின் செயலை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என்பதை வலியுறுத்துகிறது. ஜப்பான் நாட்டு மக்களும் இன்றளவும் சுடுநீர்; சிகிச்சையை ஒரு சடங்காகவே கடைபிடித்து வருகிறார்கள். ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும், ஒருவர் தன் அன்றாட; வாழ்க்கையில் வெந்நீரை பயன்படுத்துவதுதான் ஜப்பானியர்களின் சுடுநீர் சிகிச்சையின் நோக்கம். இதை முறையாகவும், தொடர்ச்சியாகவும்; கடைபிடிக்கப்படும்போது பல்வேறு சுகாதார பிரச்னைகளையும் எதிர்த்துப் போராட உதவும் என நம்புகிறார்கள் ஜப்பானியர்கள். இப்போது உலகம் முழுவதும்; மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் சுடுநீரின் மருத்துவ நன்மைகளை கண்டறிந்து வருகிறார்கள். அப்படிப் பார்த்தால் உடலின் எல்லா; பிரச்னைக்குமே சுடுநீர் மருத்துவம் உதவுவதை உணர முடிகிறது.உடல் எடை குறைய…எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் வெந்நீரை பருகுவதால் ஒரு நாளில் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் கலோரிகளை எரிக்க முடியும். சுடுநீர், குடலை; சுத்தப்படுத்துவதால், வயிற்றில் நீங்கள் சுமக்கும் அதிகப்படியான நீர் எடையை அகற்றி, வயிற்று உப்புசத்தை நீக்கிவிடும். தற்போது ஊட்டச்சத்து நிபுணர்களும்; ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன், எலுமிச்சை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து குடித்து உங்கள் நாளைத் தொடங்குவது மிகவும் நல்லது என்றும், அது; நம் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அதிசயங்களை நிகழ்த்துவதையும் அறிவுறுத்துகிறார்கள்.சைனஸ் பிரச்னைக்கு…அடிக்கடி மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் ட்ராப்ஸ் மற்றும் மாத்திரைகளைவிட வீட்டிலேயே எளிதாக செய்யும் மருத்துவத்தை விரும்புகிறார்கள்.; அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சார்ந்த மருத்துவ அடிப்படையிலான விஞ்ஞானியான நெசோச்சி ஒகே-இக்போக்வே, ‘சுவாசக்குழாய் நோய்த்தொற்றினைப்; போக்க சுடுநீர் உதவும். குளிர்ந்த நீரைவிட, சூடான நீரை குடிக்கும்போது மூச்சுக்குழாயில் அடைத்துக் கொண்டிருக்கும் சளியை விரைவில் வெளியேற்ற முடியும்’; என்கிறார். பற்களின் ஆரோக்கியத்திற்கு…‘குளிர்ந்த நீருக்குப் பதில், சுடுநீர் உபயோகத்தை உங்கள் பற்களும் விரும்பலாம்’ என்கிறார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் புகழ் பெற்ற பெரியோடென்டிஸ்ட் மற்றும்; ஊட்டச்சத்து நிபுணரான சான்டா மால்டோவன். வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது பற்களில் சமீபமாக எதாவது மறுசீரமைப்பு செய்து கொண்டவர்களுக்கு; மிகவும் நல்லது. ஏனெனில், பற்களின் இடைவெளிகளை நிரப்ப பயன்படுத்தப்படும் வெள்ளை நிரப்பு பொருட்களில் குளிர் நீர் பட்டால் அவை சுருங்கிவிடுகின்றன.; இதனால் நிரப்புவது தடுக்கப்படுகிறது. மிகவும் சூடான நீராக இல்லாமல் வெதுவெதுப்பான நீர் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கும், முத்துப்போன்ற வெள்ளையான பற்களுக்கும் மிக நல்லது.செரிமானத்திற்கு…சுடுநீர் ஒரு ரத்தநாள விரிவூக்கி விளைவைக்(Vasodilator effect) கொண்டிருக்கிறது. அதாவது சுடுநீர் ரத்த நாளங்களின் உட்புறச் சுவரின் தசைகளைத்; தளரச்செய்து அவற்றினை இலவாக்கி விரிவுத்தன்மையை அதிகரிக்கக் கூடியவை. இதனால், குடலை நோக்கி விரைந்து செல்ல ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.; இந்த செயல் செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. ‘காலையில் வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது குடலுக்குத் தேவைப்படும் செரிமான அமைப்பின் செயலை; துரிதப்படுத்த முடியும். அதுமட்டுமல்ல, ஒவ்வொருமுறை உணவு எடுத்துக் கொண்ட பின்னும் சுடுநீர் குடிப்பது, நீரேற்ற விளைவை (Hydrating effect); துரிதப்படுத்தி, கொழுப்பு உணவுகளை எளிதில் செரிமானம் அடையும் வகையில் உடைத்து, அதை வெளியேற்றவும் உதவுகிறது’ என்கிறார் அமெரிக்கன் காலேஜ்; ஆஃப் கார்டியாலஜியின் செயல் தலைவரான லூசியாபெட்ரே.நச்சுக்களை வெளியேற்ற…‘சுடுநீர் உடல் வெப்பநிலையை உயர்த்துவதன் மூலம் வியர்வை செயல்முறையைத் தூண்டுகிறது. உடல் நச்சுக்களை அகற்றுவதற்கு வியர்வை சிறந்த; வழியாகும். சுடுநீரோடு எலுமிச்சையும் சேர்த்து அருந்தும்போது, நாம் தினமும் உணவு மூலம் உடலினுள் செல்லும் அனைத்து அமிலத்தன்மையையும்; சமநிலைப்படுத்த முடியும். எலுமிச்சை பிடிக்காதவர்கள் சூடான க்ரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். அது உடலின் தீவிர ஃப்ரீ ரேடிகல் செயல்பாட்டை; குறைக்கக்கூடும்’ என்பதையும் லூசியா பெட்ரே குறிப்பிடுகிறார்.இயற்கை வலி நிவாரணி…குளிர்ந்த நீர் அருந்தும்போது தசைகள் சுருங்கும். ஆனால், சுடுநீர் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசைகளைத் தளர்வடையச் செய்வதால்,; மூட்டுவலி முதல் மாதவிடாய் வலிகள் வரை அனைத்து வலிகளும் மறையும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உண்டாகும் இதமான உணர்வு விரைவாக தூங்க உதவும். வயிறு நிரம்பிய உணர்வும் ஏற்படுவதால், நடு இரவில் ஏற்படும் உணவின் மீது உண்டாகும் க்ரேவிங்ஸ் வராமல் காலையில் புத்துணர்ச்சியுடன் எழ முடியும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க…சுடுநீர் குளியலைப் போலவே, சுடுநீரை அருந்துவதும் உடல் உறுப்புகள் முழுவதுக்கும் ரத்தத்தை மிகவும் திறம்பட கொண்டு செல்ல உதவும். சூடான நீரைக்; குடிப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். அதாவது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரித்து, இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மலச்சிக்கலைக் குறைக்கிறதுகுடலியக்கம் குறைவாக இருப்பது அல்லது குடலியக்கம் முற்றிலுமாக நிற்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் உடலில் ஏற்படும்; நீர்ப்பற்றாக்குறையே. நீங்கள் ஒவ்வொரு நாளும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரைக் குடிக்க ஆரம்பித்தால், உங்கள் குடல் இயக்கத்தை; மேம்படுத்தவும் மலச்சிக்கல் ஏற்படுவதைக் குறைக்கவும் முடியும். மந்தமான குடல் இயக்கங்களே மலச்சிக்கலுக்குக் காரணம் என்பதால் சுடுநீர் குடிப்பதன் மூலம்; குடல் தசைகள் சுருங்கி, விரியும் தன்மையைத் தூண்டச் செய்யலாம்.முதுமையைத் தள்ளிப்போட…‘முன் கூட்டிய முதுமைத்தோற்றம் இன்றைக்கு பெரும்பாலான பெண்களின்/ஆண்களின் சவாலாக இருக்கிறது. வெதுவெதுப்பான நீரை பருகுவதன் மூலம்; முதுமைத் தோற்றத்தை தவிர்க்கலாம். சுடுநீர் நச்சுக்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த உதவும். அதேவேளையில், பழுதடைந்த சரும செல்களை சரி செய்து,; சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கவும் செய்கிறது’ என்கிறார் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவு அறிவியல் மற்றும் மனித ஊட்டச்சத்து; நிபுணரான ஸ்டெல்லா மெட்சோவாஸ். நட்புறவை மேம்படுத்துகிறது…எல்லா ஆரோக்கிய நன்மைகளுக்கும் அப்பாற்பட்டு, சுடுநீர் உங்களை இணைக்கமான மனிதராக மாற்றக்கூடும். பொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆய்வில்,; ‘பங்கேற்பாளர்களிடம் சுடுநீர் மற்றும் குளிர்நீர் கொடுத்து சோதித்ததில், சுடுநீர் குடித்தவர்கள் மற்றவர்களைவிடவும், மிகவும் தாராளமான குணம் மற்றும்; அக்கறையுள்ள ஆளுமைகளை கொண்டவர்களாக இருந்தனர்’ என கண்டறிந்துள்ளனர்.வெந்நீர் எச்சரிக்கைநீங்கள் ஏதாவது நோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொள்பவராக இருந்தாலோ அல்லது தொடர்ச்சியாக வெந்நீர் பருக வேண்டும் என்று முடிவு செய்தாலோ; மருத்துவரின் ஆலோசனையுடன் அதனை கடைபிடிப்பது முக்கியமானது. உணவுக்குழாய் பிரச்னை உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரை அருந்த வேண்டும்.; பொதுவாகவே, வெப்பநிலை மிகாமால் அறைவெப்பநிலைக்கு சற்று கூடுதலாக, கைபொறுக்கும் சூடு என்பார்கேள அதுபோன்று அருந்தினால் நல்லது. 2008ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின்படி, எந்தவொரு திரவமும் 136 டிகிரி ஃபாரன்ஹீட் (57.8 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையே குடிக்கத் தகுந்ததாக; பரிந்துரைக்கிறார்கள்.– உஷா நாராயணன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi