கரூர்: மாணவர்கள் படிக்கும் போதே கேள்வி கேட்டு வினாக்களுக்கு விடை காண வேண்டும் கரூரில் இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமார் பேசினார். ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வானியல் மற்றும் புதுமை-23 என்ற கருத்தரங்கம் பள்ளி தாளாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பணியாற்றிய விஞ்ஞானி மற்றும் அறிவியல் எழுத்தாளரான டாக்டர் சசிகுமார் கலந்து கொண்டு பேசுகையில், குறிப்பாக \”மாணவர்கள் பாடத்தை உற்று நோக்கி கவனித்து ஏன்? எதற்கு? எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்டு விடை காண கற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படும்\” எனக் கூறினார். மேலும் மாணவர்கள் வானியல் துறை தொடர்பாக கேட்கப்பட்ட பல கேள்விகள் அறிவியல் பூர்வமாகவும் சரியான விளக்கம் அளிப்பதாகவும் இருந்ததால் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.