கம்பம், ஆக.15: நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழக, கேரள எல்லைப் பகுதிகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைப்பாதைகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை கம்பமெட்டு, குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி சோத னை செய்தனர். இதேபோ ன்று கம்பம் பழைய மற்றும் புதிய பேருந்துநிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை
previous post