செய்முறை ஒரு கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் சேர்த்து அதில்
பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி அனைத்தையும் தனித்தனியாக
வதக்கி வைக்கவும். பின் அனைத்தையும் சேர்த்து பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு,
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
சேர்த்து வதக்கவும். பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை,
குருமிளகு சேர்த்து அதன்பின்; Fried onion; சேர்த்து தயிர் ஊற்றி வேக
விடவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்) பின் ஒரு பாத்திரத்தில் தயார் செய்த
மசாலாவை சேர்த்து கொத்தமல்லி தூவி வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல்
புதினா, கொத்தமல்லி, Fried onion, குங்குமப் பூ சாறு ஊற்றி, லெமன் மற்றும்
நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீரை அதன்மேல் தெளித்து 10 நிமிடம் மிதமான
சூட்டில் தம் போட்டு இறக்கினால் கமகமக்கும் சுவையான வெஜ் தம் பிரியாணி
தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் குருமா சேர்த்து பரிமாறவும்.குறிப்பு: Fried onion செய்யும் முறையை முன்பக்கத்தில் பார்க்கவும்.
வெஜ் தம் பிரியாணி
58
previous post