எப்படிச் செய்வது?அனைத்து காய்கறிகளையும் ஒரே அளவில் வெட்டி உப்பு,
தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு 1
டீஸ்பூன்; மைதா மற்றும் 1 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து காய்களை பிரட்டி
வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு,
பெப்பர்; சேர்த்து குளிர்ந்த தண்ணீர் ஊற்றி தண்ணியாக மாவை கரைத்துக்
கொள்ளவும். பிறகு காய்களை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில்
பொறித்தெடுக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய;
பச்சைமிளகாய், செலரி, பூண்டு சேர்த்து வதக்கி ரெட் சில்லி பேஸ்ட், டொமேட்டோ
கெட்சப், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து பொரித்த காய்களை சேர்த்து; நன்கு
பிரட்டி ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.