கரூர், ஜூலை 1: வெங்கமேடு அருகே மன உளைச்சலில் இருந்து வந்த முதியவர் காட்டுப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வெங்கமேடு புதுக்குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (79). இவர், கடந்த சில மாதங்களாக விரக்தியிலும், மன உளைச்சலிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் துரைசாமி குளத்துப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்று அங்கிருந்த மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.