நெல்லை, செப். 14: வீரவநல்லூர் பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மூக்கையா (26). இவர், கடந்த 9ம்தேதி முக்கூடல் மார்க்கெட்டுக்கு தனது பைக்கில் சென்றார். பைக்கை மார்க்கெட் முன்பு நிறுத்திவிட்டு சென்றவர், திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் முக்கூடல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்