வீரவநல்லூர்,செப்.3: வீரவநல்லூரில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தலைவர் வீரமணி, திமுக மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. ஒன்றியச் செயலாளர் செல்வ சுந்தரசேகர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தி.க. தலைவர் வீரமணி, ‘பெரியார் வாழ்க்கை வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். அதன் முதல்பிரதியை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் பெற்றுக்கொண்டார். மாநாட்டில் தி.க. மாவட்டச் செயலாளர் வேல்முருகன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் சேரன்மகாதேவி கிழக்கு முத்துபாண்டி பிரபு, மேற்கு முத்துகிருஷ்ணன், அம்பாசமுத்திரம் பரணி சேகர், நகரச் செயலாளர் சுப்பையா மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வீரவநல்லூரில் திக சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு
previous post