ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே மருதூர் கிராமத்தில் வினை தீர்க்கும் வீரராசா விநாயகர் கோயில் மண்டலபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் கடந்த மாதம் 3ம் தேதி அன்று ஐங்கரன், மகாலட்சுமி, நிலத்தேவர் வழிபாடு, என் திசை காவலர்கள் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. கும்பாபிஷேகம் முடிந்து நேற்று 48 வந்து நாள் மண்டலம் அபிஷேகம் நேற்று நடைபெற்றது. மண்டல அபிஷேகத்தில் முன்னிட்டு நேற்று காலை அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாவு பொடி, திரவியபொடி, மஞ்சள், சந்தனம், எலுமிச்சைசாறு, தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை நடந்தது. மண்டல அபிஷேகத்தின் போது மருதூர் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
வீரராசா விநாயகர் கோயில் மண்டலாபிஷேகம்
58
previous post