திருச்சி, ஜூன் 25: மணப்பாறை அணியாப்பூரிலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், நாளை முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவுள்ளதால் அப்பகுதியில் யாரும் பிரவேசிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயற்சி மையத்தில் நாளை (ஜூன் 26) முதல் ஜூலை 6ம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் 27 BN ITBP, Alappuzha பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
எனவே அச்சமயம் பயிற்சி தளம் அமைந்துள்ள பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை ஓட்டி செல்வேதா, அல்லது அப்பகுதியில் நடமாடுவதோ கூடாது. மேலும் பயிற்சி தள வளாகத்தின் உள்ளேயும் பிரவேசித்தல் கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.