பெ.நா.பாளையம். பிப்.23: கூடலூர் நகராட்சி மற்றும் 4. வீரபாண்டி பேரூராட்சியை சேர்ந்த திமுக பாகநிலை முகவர்கள் கூட்டம் நகர செயலாளர் அறிவரசு தலையில் நடைபெற்றது. வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அந்தோணிராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உடுமலை ஜெயகுமார் பாக நிலை பொறுப்பாளர்களுக்கு கையேடுகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ன்கூட்டத்தில் பொதுகுழு உறுப்பினர் முருகானந்தம். அவைத்தலைவர் ஆனந்தன், ஐடி பிரிவு முனுசாமி, சுற்றுச்சூழல் அணி குணசேகரன், வீரபாண்டி பேரூராட்சி துணை தலைவர் இனியராஜ், பொருளாளர் கார்த்திக், பொறியாளர் அணி உதயகுமார், இளைஞர் அணி உதயகுமார், நிர்வாகிகள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.