செய்துங்கநல்லூர்,ஆக.17: சுதந்திர தினத்தை முன்னிட்டு வல்லநாட்டில் உள்ள வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம் வளாகத்தில் அரசு சார்பில் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும் அங்கிருந்த வீரன் வெள்ளையத்தேவன் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் யூனியன் பிடிஒக்கள் முத்துக்குமார், அரவிந்தன், மற்றும் வீரன் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்கள் பங்கேற்றனர்.