செங்கல்பட்டு, ஆக.19: ரெட்டிகுப்பம் பகுதியில், குல தெய்வ வழிப்பாட்டுக்கு சென்றபோது, வீட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ரெட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த இந்திரஜித் (59). இவர், தின கூலி வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் இந்திரஜித் தனது குடும்பத்துடன் ஆடி மாதம் என்பதால் குல தெய்வ கோவிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ₹1 லட்சம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்திரஜித் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.