தர்மபுரி, மே 30: தர்மபுரி அருகே ஏ.ஜெட்டிஹள்ளி அவ்வைவழி பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு உட்பட்ட ஓசூர் வீட்டுவசதி பிரிவுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் தனிநபர்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. நேற்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஓசூர் வீட்டு பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் தலைமையில், அதியமான்கோட்டை போலீசார் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த பேக்கரி, ஓட்டல்கள், பழக்கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன. இதன் மூலம் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது, அதியமான்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.